தி.மு.க. அலுவலகத்தில் தேவர் ஜெயந்தி விழா
கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் தி.மு.க. ஒன்றிய அலுவலகத்தில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். கடையநல்லூர் நகரச் செயலாளர் அப்பாஸ், நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பூசை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கடையநல்லூர் அய்யாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் செல்லத்துரை, முத்துராமலிங்க தேவர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story