"தி.மு.க. ஆட்சிக்கு, தி.மு.க.வினரே முடிவுரை எழுதுவார்கள்" - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி


தி.மு.க. ஆட்சிக்கு, தி.மு.க.வினரே முடிவுரை எழுதுவார்கள் - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி
x

“தி.மு.க. ஆட்சிக்கு, தி.மு.க.வினரே முடிவுரை எழுதுவார்கள்” என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

மதுரை


"தி.மு.க. ஆட்சிக்கு, தி.மு.க.வினரே முடிவுரை எழுதுவார்கள்" என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

முடிவுரை எழுதுவார்கள்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. ஆட்சியில் ஆவின் பால் விலை உயர்வு மட்டும் அல்ல, எல்லாமே விலை உயர்வு தான். தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரியை குறைப்போம் வசதியை பெருக்குவோம் என்று வசனம் பேசிவிட்டு இன்றைக்கு வரியை குறைக்க வேண்டாம். ஆனால் உயர்த்தாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைக்கு மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும்.

ஆனால், மின் கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது என்று வசனம் பேசினார். இன்றைக்கு மின்சார கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளனர். ஆண்டுதோறும் மின்சார கட்டணம் 6 சதவீதம் உயர்த்தப்படும் என்று அரசாணையும் அறிவித்துள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு தி.மு.க.வினரே முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் சிரிக்கிறார்கள்

தி.மு.க. தன்மானம் இல்லாத கட்சி. சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சுயமரியாதை இழந்த கட்சி. உதயநிதியின் மகனுக்கும் கொடி பிடிப்போம் என சொல்கிற அளவிற்கு தன்மானம் அற்ற சுயமரியாதையை இழந்த இயக்கமாக இன்றைக்கு தி.மு.க. இருக்கிறது.

ஆனால் அவர்கள் சுயமரியாதையின் சுடர்வொளிகள் என தப்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். தி.மு.க.வின் செயல்பாடுகளை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள் என்றார்.


Next Story