தி.மு.க. செயற்குழு கூட்டம்


தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று கரூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் மாவட்ட செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர் முனவர் ஜான், வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாளான வருகிற 19-ந்தேதி மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழகம், வார்டு கழகங்கள் உள்பட 1,047 இடங்களில் பேராசிரியரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்துவது.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் 6 பகுதி கழகங்கள், 3 நகர கழகங்கள், 16 ஒன்றியக் கழகங்கள், 8 பேரூர் கழகங்கள் என 33 இடங்களில் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்துவது. மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியினை பல மடங்கு அதிகரிக்க, கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநகர செயலாளர்கள் எஸ்.பி.கனகராஜ், கோல்டுஸ்பாட் ராஜா, அன்பரசன், சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story