தி.மு.க. செயற்குழு கூட்டம்


தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு, தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகர, ஒன்றிய, பேரூர், இளைஞர் அணி, பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட அணி அமைப்பாளர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி, மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணைச் செயலாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர்கள் மு.சிவானந்தம், கே.துரை மஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.கண்ணையன், ஆ.அசோகன், எம்.எஸ்.கலைமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஜி.கே.குழுமம் சந்தோஷ்காந்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பொதுக்குழு, பேரூர், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் கே.குமுதா நன்றி கூறினார்.


Next Story