தி.மு.க. செயற்குழு கூட்டம்


தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டை சிப்காட் பாரதிநகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் குமுதா, சிவானந்தம், மஸ்தான், மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து 15 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை ஒரு வருடம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, தேர்தலுக்கு 100 பேருக்கு ஒருவரை நியமித்து பூத் கமிட்டி அமைத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர்.வினோத்காந்தி, மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தலைமைக் கழக வக்கீல்கள் சூர்யா வெற்றிகொண்டான், வி.கவி.கணேசன், சட்ட திட்ட திருத்த துறை இணை செயலாளர் ஞானசேகரன், செய்தி தொடர்பு குழு துணைச் செயலாளர் சையத் ஹபீல், செயற்கு உறுப்பினர்கள் அசோகன், சுந்தரம், மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story