தி.மு.க. செயற்குழு கூட்டம்
நத்தத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
நத்தத்தில், தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது, நத்தம் தொகுதியில் புதிதாக அதிக அளவில் தி.மு.க. உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக நகர செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். இதில் கட்சியின் தலைமை பொறுப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைசெயலாளர் சுந்தரராஜன், மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், ஒன்றிய பொருளாளர்கள் கலிபுல்லா, முத்துராமலிங்கம், துணைசெயலாளர்கள் பிரசாத், தன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் சகுபர்சாதிக், இஸ்மாயில் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.