தி.மு.க. பொதுக்கூட்டம்
குத்தாலம் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்
குத்தாலம்:
குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கலைஞர் அரங்கத்தில் குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் சபீர் ரகுமான், ஒன்றிய துணைச் செயலாளர் முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவஞான சுந்தரி பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எழுமகளூர் ராஜா வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் பேசினார். இதில்மாவட்ட பொருளாளர் ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், இமயநாதன், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் முருகப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ராஜ்குமார் நன்றி கூறினார்.