தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2023 6:45 PM GMT (Updated: 16 March 2023 6:46 PM GMT)

திருக்கடையூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நட்நதது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடை யூரில் தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடை பெ ற்றது. கூட்டத்திற்கு செம்பனார்கோவில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமை தாங்கினார், தகவல் தொழில்நுட்ப அணி தஞ்சை மண்டல பொறுப்பாளர் .ஸ்ரீதர்,ஊராட்சி மன்ற தலைவர் ஜெ யமாலதி சிவராஜ், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு துணைத்தலைவர் பாஸ்கரன் வரவே ற்றார். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர். நிவேதா முருகன் எம்.எல்.ஏ., தலைமை கழக பே ச்சாளர் போடி. காமராஜ், கோமல் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக திருக்கடை யூரில் உள்ள மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தை நிவே தா முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத் தார். இதில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம். அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா ரமேஷ், மற்றும் மாவட்ட , ஒன்றிய, நகர, கிளை க் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கட்சி முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story