தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் விருகாவூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அவைத்தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு, ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி கலியன் வரவேற்றார். தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர் குழு அமைத்தல், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார குழு அமைத்தல் குறித்து விரிவாக பேசினார். தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் சுப்பு இளங்கோவன், மடம் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர் தேவி பழனிவேல் உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.


Next Story