ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது திமுக அரசு..! இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவாலாகிவிடும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி


ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது திமுக அரசு..!  இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவாலாகிவிடும்  - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 29 July 2023 4:15 PM IST (Updated: 29 July 2023 4:49 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக ஆட்சியில் கடன் வாங்குவதாக குறைசொன்ன திமுக இதுவரை ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,

நேற்று நடந்தது விவசாயிகள் சார்ந்த போராட்டம். காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள். என்எல்சிக்கு எதிராக போராடிய எங்கள் தொண்டர்கள் மீது கடுமையான வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

விவசாயிகள் விரோத போக்கை அரசு கைவிட வேண்டும். அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா? அவ்வாறு மனசாட்சி இல்லாமல் இருக்கும் என்எல்சிக்கு திமுக அரசு, அமைச்சர்கள், ஆட்சியர்கள், அதிகாரிகள் ஆதரவாக உள்ளனர். என்எல்சி நிலம் கையகப்படுத்துவதை முதல் அமைச்சர் ரத்து செய்ய வேண்டும். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் கடன் வாங்குவதாக குறைசொன்ன திமுக இதுவரை ரூ.2.20 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்கும் இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு திவாலாகிவிடும் என கூறினார்.


Next Story