கீழையூர் ஒன்றியக்குழு 12-வது வார்டில் தி.மு.க. வெற்றி


கீழையூர் ஒன்றியக்குழு 12-வது வார்டில் தி.மு.க. வெற்றி
x

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் கீழையூர் ஒன்றியக்குழு 12-வது வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் கீழையூர் ஒன்றியக்குழு 12-வது வார்டில் தி.மு.க. வெற்றி பெற்றது.

இடைத்தேர்தல்

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணப்பட்டது.

தி.மு.க. ஆதரவு வேட்பாளர் ஹாஜா நிஜாமுதீன் 1,417 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

ஆதலையூர்- பனங்காடி ஊராட்சி

திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளர் முகமது அன்வர்தீன் 101 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு வெற்றி சான்றிதழை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன் வழங்கினார்.

தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி ஊராட்சியில் 8-வது வார்டு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் கோமதி 83 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு வெற்றி சான்றிதழை ஊராட்சி ஒன்றிய ஆணையர் செல்வராஜ் வழங்கினார்.

தி.மு.க. வெற்றி

வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 12-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் நாகரெத்தினம் 2,006 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


Next Story