40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெற அயராது பாடுபட வேண்டும்


40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெற  அயராது பாடுபட வேண்டும்
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:45 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

விருதுநகர்

காரியாபட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெற கட்சி நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக மல்லாங்கிணறு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும்.

கருணாநிதி நூற்றாண்டு விழா

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை அனைத்து தி.மு.க. சார்பு அணிகளும் சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் வனராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் காரியாபட்டி செல்லம், கண்ணன், நரிக்குடி போஸ் தேவர், கண்ணன், திருச்சுழி சந்தனப்பாண்டியன், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், கமலி பாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிவசக்தி, சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story