புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்
x

புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கல்வி, வேலை வாய்ப்பு, அரசு நிர்வாகத்தில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்தும் வகையில், இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க முயற்சிப்பதை கண்டித்து, புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி சார்பில் திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், நகர செயலாளர் செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா, மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story