தி.மு.க. தலைமையிலானமதசார்பற்ற கூட்டணியை எந்த சின்னம் வந்தாலும் வெல்ல முடியாது;ஈரோட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி


தி.மு.க. தலைமையிலானமதசார்பற்ற கூட்டணியை எந்த சின்னம் வந்தாலும் வெல்ல முடியாது;ஈரோட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
x

தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை எந்த சின்னம் வந்தாலும் வெல்ல முடியாது என்று ஈரோட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஈரோடு

தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை எந்த சின்னம் வந்தாலும் வெல்ல முடியாது என்று ஈரோட்டில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

மதசார்பற்ற கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட ராஜாஜிபுரம், காந்திபுரம், சுப்பையா வீதிகளில் நேற்று, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.மேலும், கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படியான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் அவர் வாக்காளர்களிடம் வழங்கினார். இதைத்தொடா்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் ஈரோடு மாநகராட்சி 37-வது வார்டில் முழுமையாக வாக்கு சேகரித்து வருகிறோம். தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை எந்த சின்னம் வந்தாலும் வெல்ல முடியாது. ஏழை, எளிய மக்கள் அதிகமாக நேசிக்கின்ற தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

அதிக வாக்குகள்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றியின் மூலம், வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் இருக்கிற ஆட்சி, தி.மு.க. நினைக்கின்ற ஆட்சியாக இருக்கும். வாக்கு சேகரிக்க செல்லும் போது மக்கள் மிகுந்த வரவேற்பு அளிக்கிறார்கள். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்த பிரசாரத்தில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, ஒன்றிய தலைவர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், ஒன்றிய செயலாளர் பொன் முருகேசன், உடன்குடி இளங்கோ, அஷாப், திருவைகுண்டம் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், கோபிநாத், கவுன்சிலர் தீபலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story