தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் நாளை மறுநாள் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. அறிக்கை
விழுப்புரம்
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள தளபதி அரங்கில் நடக்கிறது. இதற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில், வருகிற 26, 27-ந் தேதிகளில் விழுப்புரத்துக்கு வருகை தரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படுகிறது.
எனவே இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.