தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை
பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
திருப்பத்தூர்
பேரணாம்பட்டு கிழக்கு, மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏரிகுத்தி கிராமத்தில் தொடங்கி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் டேவிட் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜமார்த்தாண்டன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், இளைஞரணி நிர்வாகிகள் விஜயகுமார், ரஞ்சித் குமார், சத்தியமூர்த்தி, சரத்குமார், நேரு உள் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story