மத்திய மந்திரிக்கு திமுக எம்பி வில்சன் கடிதம்

பதவி உயர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக சட்டத்திருத்தம் செய்யக்கோரி மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு திமுக எம்பி வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
பதவி உயர்வில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக சட்டத்திருத்தம் செய்யக்கோரி மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு திமுக எம்பி வில்சன் கடிதம் எழுதியுள்ளார். வில்சன் எழுதியுள்ள கடிதத்தில், உண்மையான சமூக நீதியை நிலை நாட்ட, நிர்வாகத்தில் போதுமான பிரதிநிதுத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என கூற்றியுள்ளார்.ஏற்கனவே அரசியலமைப்பு பிரிவு 16 நான்கு 4 ஏ மற்றும் 4 பி ஆகியவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்வதாக குறிப்பிட்டுள்ள அவர், ஓ.பி.சி பிரிவினருக்கு அவ்வாறு இல்லை என கூறியுள்ளார்.
இதனால், சமூகத்தில் பின் தங்கியுள்ள ஓபிசி பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள வில்சன், ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக, அரசியலமைப்பு பிரிவு16ல் திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்