தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
குடியாத்தத்தில் தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
குடியாத்தம்
குடியாத்தம் நகர தி.மு.க. மாணவர் அணி சார்பில் பிச்சனூர் தேரடி பகுதியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர மாணவர் அணி அமைப்பாளர் நகரமன்ற உறுப்பினர் நவீன்சங்கர் தலைமை தாங்கினார். நகர அவைத் தலைவர் நெடுஞ்செழியன், துணை செயலாளர்கள் ஜம்புலிங்கம், மனோஜ், வசந்தா, மாவட்ட பிரதிநிதி தண்டபாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் வரவேற்றார்.
கூட்டத்தில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., தி.மு.க. செய்தி தொடர்பு பிரிவு துணைத் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி, மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மாவட்ட துணை செயலாளர்கள் ஜி.எஸ்.அரசு, எஸ்.பாண்டியன், குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நத்தம்பிரதீஷ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர மன்ற உறுப்பினர் என்கோவிந்தராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.எம். மோனீஷ் நன்றி கூறினார்.