தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகள் மும்முரம்


தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகள் மும்முரம்
x

விருதுநகரில் நாளை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்


விருதுநகரில் நாளை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

முப்பெரும் விழா

விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணா நகரில் அமைந்துள்ள கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பாக கட்சி பணியாற்றியவர்களுக்கு பரிசும், கழக முன்னோடிகளுக்கு விருதுகளையும் வழங்கி கவுரவிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து மு.க. ஸ்டாலின் விழா சிறப்பாக நடைபெற நெருக்கடிகளிலும், சோதனைகளிலும் தி.மு.க.வை கட்டி காத்த கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளை உங்களில் ஒருவனாக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

போலீசார் பாதுகாப்பு

இ்ந்தநிலையில் நேற்று முப்பெரும் விழா நடைபெறும் கலைஞர்திடலில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

விழாவில் கலந்து கொள்வோருக்கான அடிப்படை வசதிகள் செய்வதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாகவும் உரிய போக்குவரத்து வசதிகள் செய்யவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 3,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story