ஊட்டியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடித்ததை கண்டித்து ஊட்டியில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், பாபர் மசூதி இடித்ததை கண்டித்து ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அபுதாகிர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சலீம் முன்னிலை வகித்தார். ஆர்பாட்டத்தில் பாபர் மசூதி இடித்ததை கண்டித்தும், பாபர் மசூதி இருந்த இடத்தை மீட்டுத்தர வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோஷம் எழுப்பி வலியுறுத்தினர். இதில்மாநில அமைப்பு செயலாளர் காதர் மொய்தின், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



Next Story