ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு


ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு
x

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் முத்து துரை (வயது 55). தி.மு.க. பிரமுகரான இவர் கொத்தமங்கலம் பெரியகுளம் நீர்ப்பாசன சங்க தலைவராக உள்ளார். இந்தநிலையில் பெரிய குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கொத்தமங்கலத்தில் சாலையின் குறுக்கே கட்டில் வைத்து நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை குண்டுக்கட்டாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்ட முத்து துரை மீது கீரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story