இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

வேலூரில் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அவைத்தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கதிர்ஆனந்த் எம்.பி. இந்தி திணிப்பு குறித்து பேசினார்.

இதில் மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, ஒன்றியக்குழு தலைவர் அமுதா ஞானசேகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையொட்டி வேலூர் அண்ணாசாலையின் ஒருபுறம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு சில போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story