தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் பிறந்தநாள் விழா


தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் பிறந்தநாள் விழா
x

தி.மு.க. செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் பிறந்தநாள் விழா நடந்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் கே.கே.செல்ல பாண்டியன். இவரது பிறந்த நாள் விழா கீரனூரில் நடைபெற்றது. முன்னதாக புதுக்கோட்டை பெரியண்ணன் மாளிகையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர் கீரனூரில் உள்ள அவரது இல்லத்தில் மாவட்டம் முழுவதும் வந்திருந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரின் வாழ்த்துக்களை பெற்றார். மேலும் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கீரனூர் தேர்வுநிலை பேரூராட்சி கவுன்சிலராக உள்ள மா.கோ.ரவிச்சந்திரன் நீங்க நல்லா இருக்கணும் என்ற நாதஸ்வர இசையுடன் சென்று கே.கே.செல்ல பாண்டியனுக்கு பரிவட்டம் கட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் கீரனூர் நகர கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story