தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திடீர் நீக்கம்! என்ன காரணம்?


தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் திடீர் நீக்கம்!  என்ன காரணம்?
x
தினத்தந்தி 21 Oct 2022 5:12 PM IST (Updated: 21 Oct 2022 5:27 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். இந்நிலையில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான கார்கே குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு பிறகு நீக்கி விட்டார்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ் குறித்த சர்ச்சையான பதிவு, அக்கட்சியினர் மட்டுமல்லாது, தி.மு.க. தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து தி.மு.க.வின் செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. செய்தி தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதா கிருஷ்ணன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story