தி.மு.க. மாநில நிர்வாகிகள், பெரியார்- அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை


தி.மு.க. மாநில நிர்வாகிகள், பெரியார்- அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக நியமிக்கப்பட்ட தி.மு.க. மாநில நிர்வாகிகள், பெரியார்- அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ. பி.கல்யாணம், மீண்டும் 2-வது முறையாக தி.மு.க. மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ. க.அன்பழகன் ஆகியோரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட தி.மு.க. மாநில நிர்வாகிகள் குத்தாலம் கல்யாணம், அன்பழகன் ஆகியோருக்கு குத்தாலம் கடைவீதியில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது கடைவீதியில் உள்ள பெரியார், அண்ணா ஆகியோரின் உருவ சிலைக்கும், கலைஞரின் உருவப்படத்திற்கும் 2 பேரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பஸ் நிலையத்தில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடந்தது. இதில் பன்னீர்செல்வம எம்.எல்.ஏ., தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து.தேவேந்திரன், முன்னாள் மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான சம்சுதீன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் உள்ளிட்ட தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story