நாலாட்டின்புத்தூர்-இனாம் மணியாச்சியில் தி.மு.க தெருமுனை பிரசார கூட்டம்
நாலாட்டின்புத்தூர்-இனாம் மணியாச்சியில் தி.மு.க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாலாட்டின்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கடல் ராணி அந்தோணி ராஜ், கிளை செயலாளர் புவனேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார், கிளை செயலாளர் நந்தகோபால கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன், கோவில்பட்டி நகர தலைவர் கருணாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், இளைஞரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தாமோதரக்கண்ணன் நன்றி கூறினார்.
இதேபோன்று, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், இனாம் மணியாச்சி சந்திப்பில் அன்பழகன் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தெருமுனை பிரசாரக் கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கரூர் முரளி, பொதுக்குழு உறுப்பினர் பீட்டர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆர். ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கட்டிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.