தி.மு.க. தெருமுனை கூட்டம்


தி.மு.க. தெருமுனை கூட்டம்
x

மீன்சுருட்டி கடைவீதியில் தி.மு.க. தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பொய்யாமொழி அனைவரையும் வரவேற்றார். இதில் தலைமை கழக பேச்சாளர்கள் வரகூர் காமராஜ், பெரிய வளையம் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், கழக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கணேசன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர்கள் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story