தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம்
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பத்தில் தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது

கடலூர்

பண்ருட்டி

பிரசார கூட்டம்

பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை குறித்த தெருமுனை பிரசார கூட்டம் பண்ருட்டி பகுதியில் 4 இடங்களில் நடந்தது. இதற்கு நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளரும், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான புதுக்கோட்டை விஜயா கலந்து கொண்டு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி கூறினார். இதில் கடலூர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தென்னரசு, நகரஅவைத் தலைவர் ராஜா, பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் கவுரி அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் சிவா, மாவட்ட பிரதிநிதிகள் சரவணன், பிரபு, நகர வழக்கறிஞர் அணி பரணி சந்தர், நகர துணை செயலாளர்கள் சீனிவாசன், சசிகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர மன்ற உறுப்பினர் அமிர்த வேலன் நன்றி கூறினார்.

நெல்லிக்குப்பம்

இதேபோல் நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை குறித்த தெருமுனை பிரசார கூட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன் வரவேற்றார். நகர அவைத்தலைவர் ஷேக் மொய்தீன், துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, சீனிவாசன், மனோகரி முருகன், பொருளாளர் ஜெயசீலன், மாவட்ட பிரதிநிதி வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். முன்னதாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அமுதா, இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன், நகர மகளிர் அணி அமைப்பாளர் அஞ்சாலாட்சி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜா, ராமானுஜம், அப்துல் ரசாக், சுரேஷ் பாபு மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தமிழன் அருள் நன்றி கூறினார்.


Next Story