தி.மு.க. ஒன்றிய தேர்தலுக்கான விருப்ப மனுவை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்
தி.மு.க. ஒன்றிய தேர்தலுக்கான விருப்ப மனுவை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் - அமைச்சர் காந்தி அறிக்கை
தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தி.மு.க. வின் 15-வது பொதுத்தேர்தலையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் ஆகியவற்றில் மத்திய, கிழக்கு, மேற்கு ஆகிய ஒன்றியங்கள், ஆற்காடு கிழக்கு. ஆற்காடு மேற்கு ஒன்றியங்கள், வாலாஜா கிழக்கு, மத்திய ஒன்றியங்கள், திமிரி கிழக்கு, திமிரி மேற்கு ஒன்றியங்கள்,
காவேரிப்பாக்கம், வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் மற்றும் கணியம்பாடி ஆகிய 18 ஒன்றியங்களில் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளோர் தலைமை கழகம் அறிவித்த வண்ணம் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான, திருவண்ணாமலை ஸ்ரீதரிடம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 5-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.