அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது - முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு
அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.
ஈரோடு,
பவானி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-
ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த திட்டங்களையும் தி.மு.க. முழுமையாக நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் அ.தி.மு.க. இயக்கத்தை முன்னாள் முதல்- அமைச்சரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் வழி நடத்தி செல்வார்.
எனவே அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story