'பெட்ரோல் விலையை தி.மு.க. அரசு குறைக்கவில்லை-உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜனதா குற்றச்சாட்டு
மத்திய அரசு வரியை குறைத்த பின்னரும் பெட்ரோல் விலையை தி.மு.க. அரசு குறைக்கவில்லை என்று ராமநாதபுரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
மத்திய அரசு வரியை குறைத்த பின்னரும் பெட்ரோல் விலையை தி.மு.க. அரசு குறைக்கவில்லை என்று ராமநாதபுரத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. குற்றம் சாட்டியது.
உண்ணாவிரதம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அரண்மனை பகுதியில் நடைபெற்றது.இதற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில துணை தலைவர் கிருபாராணி, கலாரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் சுப.நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன், இளைஞரணி ஆத்மாகார்த்திக், மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன், விவசாய அணி மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் குமார், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் முருகன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் ரமேஷ்கண்ணன், மாவட்ட துணை தலைவர் குமார், நகர் தலைவர் நாகராஜன், ராமேசுவரம் நகர் தலைவர் ஸ்ரீதர் சந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் பவர் நாகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், மாநில பொது செயலாளர் பொன் பாலகணபதி பேசியதாவது:-
பெட்ரோல் விலையை குறைக்கவில்லை
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் மக்களை வஞ்சிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை.
குறிப்பாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பா.ஜ.க.வின் 2-ம் கட்ட தலைவர்களை தாக்கும் முயற்சி அதிகரித்துவிட்டது. மத்திய அரசு வரியை குறைத்தபின்னரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைக்கவில்லை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு வாக்களித்த அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டார். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்கு எந்த நல்லதும் செய்துவிடக்கூடாது என்ற ஓரவஞ்சனையுடன் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதனை கண்டித்து தமிழகத்தில் 60 இடங்களில் பா.ஜ.க. சார்பில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.-
Allegation of BJP in hunger strike