தி.மு.க. இளைஞரணி பாசறை கூட்டம்
திருமருகலில் தி.மு.க. இளைஞரணி பாசறை கூட்டம் நடந்தது
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திருமருகலில், நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவரும், நாகை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பில் திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சனும், மாநில சுயாட்சி என்ற தலைப்பில் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் பேசினர். இதில் இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ணன், திருமருகல் ஒன்றிய செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன், திட்டச்சேரி நகர செயலாளர் முகமது சுல்தான் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story