தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்


தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
x

தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் சார்பில் இல்லம் தேடி தி.மு.க.இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நகர் மன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் விக்னேஷ் காமராஜ் முன்னிலை வகித்தார். வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன், உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வேதாரண்யம் மேற்கு ஒன்றியம் ஆயக்காரன்புலம்1-ம்சேத்தி ஊராட்சிக்குட்பட்ட பழையகரம், முதலியார் குத்தகை, பெரிய குத்தகை, கொச்சுகுத்தகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது

அப்போது இளைஞர்கள் படிவங்களை பூர்த்தி செய்து தி.மு.க.வில் தங்களை இணைந்து கொண்டனர். இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அசோக், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, வக்கீல் அணியை சேர்ந்த அன்பரசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி பாபு, ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் அருளரசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story