டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டு


தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நல்லாசிரியர் விருதுபெற்ற தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளி முதல்வருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி

நல்லாசிரியர் விருதுபெற்றுள்ள தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

நல்லாசிரியருக்கு பாராட்டு

தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வரும் மாரியம்மாள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்று உள்ளார். இதனை தொடர்ந்து அவர், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் உமரிசங்கர், உதவி தலைமையாசிரியர் வாசுகி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் விருது பெற்ற முதல்வரை பள்ளி கமிட்டி உறுப்பினரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான பிரம்மசக்தி, தட்சணமாற நாடார் சங்க உறுப்பினர் மற்றும் பள்ளி கமிட்டி உறுப்பினர் மு.லிங்கசெல்வன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நீர்தேக்க தொட்டி திறப்பு

திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவும், மேல்நிலை நீத்தேக்க தொட்டி திறப்பு விழாவும் நடந்தது. விழாவில், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, வீரபாண்டியன்பட்டினம் (ரூரல்) பஞ்சாயத்துக்கு உட்பட்ட சண்முகபுரத்தில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.

ரேஷன்கடை-நூலக கட்டிடம்

மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சண்முகபுரம் காந்தி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பில் ரேஷன்கடை கட்டிடம் கட்டவும், பள்ளிப்பத்து பஞ்சாயத்து செங்குழியில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய நூலக கட்டிடம் கட்டுவதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், யூனியன் ஆணையர் அன்றோ, தி.மு.க மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், கவுன்சிலர் செந்தில்குமார், நகர செயலாளர் வாள்சுடலை, ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து துணை தலைவர் கல்யாணசுந்தரம், காயாமொழி பஞ்சாயத்து தலைவர் ராஜேசுவரன், அரசு வக்கீல் சாத்ராக், காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர் சுகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story