மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மாதிரி தேர்வு
மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மாதிரி தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான மாதிரித்தேர்வுகள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் இருந்து முதன்மைத் தேர்வுகளில் பங்கு பெறும் 71 பேரும் போட்டித்தேர்வர்கள், முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்று கரூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எளிமையான முறையில் பணியாற்ற வேண்டும். குறிப்பாக நமது மாவட்டத்தின் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு பகுதியில் போட்டித்தேர்வுகளுக்கு, பள்ளிக்கல்விக்களுக்கான சிறப்பானதொரு மையங்கள் உள்ளன.
அதேபோல் கரூர் மாவட்டத்திலும் சிறப்பானதொரு மையங்களை உருவாக வேண்டும். போட்டித்தேர்வுக்கான வினாக்களுக்கு விடை அளிக்கும்பொழுது தெளிவாகவும் எடுத்துகாட்டுடன் பதில்கள் அமையவேண்டும். எந்த ஒரு வினாக்களுக்கும் பதில் உங்களுக்குள் இருக்க வேண்டும். நீங்கள் அடுத்த தலைமுறையை வழி நடத்தக்கூடிய கருத்துக்களை கொண்டு செல்வதற்கு இந்த மையம் உவமையாக இருக்கும். இந்த முயற்சி நீண்ட காலமாக கரூர் மாவட்டத்தில் இல்லாமல் இருந்தது. தற்பொது மைய நூலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளோம் என்றார். முன்னதாக சிறப்பாக பணியாற்றிய தேர்வு மைய பயிற்றுனர்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கப்பட்டது.