பாலாற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் கலெக்டர் வேண்டுகோள்
பாலாற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர்
வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழையாலும் அந்த மாநில நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் நீரினாலும், வேலூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாகவும் பாலாற்றில் 4 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாலாற்றில் இறங்கி குளிப்பது, ஆற்றின் அருகே துணிகளை துவைப்பது, விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை ஆற்றின் அருகே விளையாட அனுமதிப்பது, குறுக்கு சாலையாக ஆற்றினை கடப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story