கீரமங்கலம் நரிக்குறவர் காலனியில் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்களா?


கீரமங்கலம் நரிக்குறவர் காலனியில் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்களா?
x

கீரமங்கலம் நரிக்குறவர் காலனியில் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்களா? என்று கல்வி அதிகாரி ஆ்ய்வு செய்தார்.

புதுக்கோட்டை

கீரமங்கலம்:

கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஏராளமான பள்ளி வயது குழந்தைகள் பிரதானச் சாலையை கடந்து செல்ல முடியாமல் பள்ளியிலிருந்து இடையில் நிறுத்திக் கொண்டனர். இந்த தகவல் அறிந்து கல்வி அதிகாரிகள் அறிவொளி நகருக்கு சென்று ஆய்வு செய்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தினார்கள். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடுகள் செய்வதாக பெற்றோர் ஆசரியர் கழகம் சார்பில் உறுதி அளித்தனர். இதனால் அடுத்த நாளில் இருந்து சுமார் 32 மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் அறிவொளி நகர் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தவறாமல் வருகிறார்களா என்று பள்ளிகளில் ஆய்வு செய்த போது ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் மற்றும் பலர் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் ஆய்வு செய்து பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளை நாள் தவறாமல் பள்ளிக்கு அனுப்பினால் அவர்களும் படித்து அரசு வேலைகளுக்கு செல்ல முடியும் என்று கூறினர். அனைவரும் தவறாமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக கிராம நிர்வாக அலுவலர் ராஜா, நாணயவியல் கழகம் பசீர்அலி, அறிவியல் இயக்கம் அறிவொளி கருப்பையா ஆகியோர் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகளையும் வழங்கினார்கள்.


Next Story