பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x

கும்பகோணம் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வர்த்தக நகரம்

கும்பகோணம் நகரம் ஆன்மிக சுற்றுலா தலமாகவும், மிகப்பெரிய வர்த்தக நகரமாகவும் திகழ்கிறது. இங்கு வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துள்ளது.கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அருகே, காவிரி ஆற்றின் குறுக்கே நீரொழுங்கியுடன் கூடிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த நீரொழுங்கியுடன் கூடிய பாலம் அமைக்கப்பட்டால், தேப்பெருமாநல்லூர், திருபுவனம், அசூர், பெரும்பாண்டி மற்றும் உள்ளூர் 3 வாய்க்கால் மூலம் 4,200 ஏக்கர் நிலங்கள் எளிதாக பாசன வசதி பெறும். நகரில் உள்ள ரெட்டிராயர் குளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட குளங்களில் எளிதாக நீர் நிரம்ப வசதியாக இருக்கும்.

பாலம் கட்டும் பணி

இந்த நிலையில் நீரொழுங்கியுடன் கூடிய புதிய பாலம் கட்ட ரூ.15 கோடியே 67 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 200 அடி நீளம், 15 அடி அகலத்தில், 15 கதவணைகளுடன் பாலம் கட்ட பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் சென்னை சாலை வழியாக மயிலாடுதுறை, திருவாரூர் செல்லும் வாகனங்கள் கும்பகோணம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சுலபமாக சென்று விடலாம். தற்போது இந்த பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.

ஜூன் மாதம் நிறைவு

இது குறித்து பொதுப்பணி்த்துறை அ்திகாரிகள் கூறியதாவது:-

தற்போது பாலம் கட்டும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது. கும்பகோணம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருகிறது. கும்பகோணம் பகுதியை சுற்றி் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது மழை பெய்ததால் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. இதை மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி பணிகள் ஜூன் மாதம் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினாா்.


Next Story