சமூக சேவையில் ஈடுபட்ட திருநங்கைக்கு டாக்டர் பட்டம்


சமூக சேவையில் ஈடுபட்ட திருநங்கைக்கு டாக்டர் பட்டம்
x

சமூக சேவையில் ஈடுபட்ட திருநங்கைக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

சமூக சேவையில் ஈடுபட்ட திருநங்கைக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கை

திருவண்ணாமலை அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் ராதிகா நாயக் (வயது 52). திருநங்கையான இவர் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்து உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி மும்பையிலும் பல்வேறு சேவைகளை செய்து வந்து உள்ளார்.

இவரது திருநங்கைகளுக்கான சமூக சேவைகளை பாராட்டி சென்னையில் உள்ள குளோபல் யுமன் ப்பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் கடந்த 18-ந் தேதி "டாக்டர்" பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.

டாக்டர் பட்டம்

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்த அவர் கலெக்டர் முருகேஷை நேரில் சந்தித்து டாக்டர் பட்டம், பதக்கத்தை காண்பித்து வாழ்த்துக்களை பெற்று கொண்டார்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றேன். மும்பையில் நடமாடும் கண் மருத்துவமனை மூலம் 4 ஆயிரம் திருநங்கைகளுக்கு கண் பரிசோதனை செய்ய உதவி செய்து உள்ளேன். இதில் 2 ஆயிரத்து 500 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது. 250 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி கீழ்பென்னாத்தூரில் 5 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பெற்று கொடுத்து உள்ளேன். அரவாணிகள் நல சங்கம் தொடங்கி எச்.ஐ.வி. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கலெக்டரிடம் வாழ்த்து

கொரோனா 2-ம் அலையின்போது உணவின்றி தவித்த திருநங்கைகளுக்கு உதவும் வகையில் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து உணவு பொருட்களை பெற்று கொடுத்து உள்ளேன். தொடர்ந்து திருநங்கைகளுக்கு வீட்டுமனை கேட்டு போராடி வருகின்றேன். எனது பணிகள் குறித்து சமூக நலத்துறை மட்டுமின்றி சிலர் பரிந்துரை செய்ததன் பேரில் எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்து உள்ளது.

இதை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றேன் என்றார்.

அப்போது மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் மீனாம்பிகை மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story