தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் மருத்துவ சேவை
பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை பக்தர்களுக்கு தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் மருத்துவ சேவை செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ருத்ரநாத், ஹேமகுண்ட, கேதார்நாத் யாத்திரை தொடங்கிய நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சிக் சிக்மா ஹெல்த் கேர் சார்பில் மருத்துவ சேவையை உத்தரகண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங்க் தாமி தொடங்கி வைத்தார். பத்ரிநாத், கேதார்நாத் வரும் பக்தர்களுக்கு தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் ம.அருண்குமார், தென் இந்திய தலைமை சிக் சிக்மா டாக்டர் வம்சி கிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஷாஷாந்த் தலைமையில் மருத்துவ சேவையில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் சிக்சிக்மா முதன்மை அலுவலர் டாக்டர் பிரதீப் பார்ட்வஜ், தமிழக மருத்துவர்களை வரவேற்று பாராட்டி பேசினார். அப்போது சிக்சிக்மா ஹெல்த் கேர் நிறுவனம் இந்திய ராணுவ உதவியுடன் பல இயற்கை பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டு யாத்திரை காலங்களில் பக்தர்களுக்கு தமிழகத்தை சேர்ந்த டாக்டர்கள் மருத்துவ உதவி செய்து வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங்க் தாமி, தமிழக மருத்துவர் திருப்பத்தூரை சேர்ந்த டாக்டர் அருண்குமார் குழுவினரின் மருத்துவ சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.