திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.
நாமக்கல்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அதிகபடியான தெருநாய்கள் சுற்றித்திரிந்தன. இதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த திருச்செங்கோடு நகராட்சிக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் நேற்று மலை கோவிலில் சுற்றித்திரிந்த தெருநாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். பின்னர் அவற்றை வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story