நாயை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் என்று நூதன போஸ்டர்


நாயை கண்டுபிடித்து கொடுத்தால்   தக்க சன்மானம் என்று நூதன போஸ்டர்
x
திருப்பூர்


பொதுவாக, காணாமல் போன நபரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அந்த நபரின் புகைப்படத்துடன் போலீசார் போஸ்டர் ஒட்டுவார்கள். காணாமல் போன நபர் மிக முக்கியமானவர் என்றாலோ அல்லது முக்கியமான ஆவணங்கள் காணாமல் போய் விட்டோலோ, கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற விளம்பரத்தையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் திருப்பூரில் வீட்டில் வளர்த்து வந்த நாய் காணாமல் போனதால் அந்த நாயின் படத்துடன் காணவில்லை என்று திருப்பூர் பி.என்.ரோடு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் நாயின் பெயர் ஹேப்பி என்றும், அது பெண் நாய் என்றும், கடந்த 29-ந்தேதி இரவு நெருப்பெரிச்சல், ராதாநகர் பகுதியில் அந்த நாய் காணாமல் போய் விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகமும் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. நாயை காணவில்லை என்ற இந்த நூதன போஸ்டர் திருப்பூரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Next Story