மடத்துக்குளம் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் செத்தன.


மடத்துக்குளம் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் செத்தன.
x

மடத்துக்குளம் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் செத்தன.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் செத்தன.

கால்நடை வளர்ப்பு

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் ஒன்றாக உள்ளது. இங்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலும் தோட்டத்தில் கொட்டகை அமைத்து அதில் அவற்றை வளர்த்து வருகிறார்கள். உடுமலை யையடுத்த பெரியகோட்டை, சித்தக்குட்டை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மர்ம விலங்குகளின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் சில கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன. இதுகுறித்து ஆய்வு நடத்திய வனத்துறையினர் கூட்டமாக வரும் நாய்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபடுகின்றன என்று கூறி கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் ஆதாரமாகக் காட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டனர். அந்த கேமரா பதிவுகளில் நாய்கள் கூட்டமாக வரும் காட்சி பதிவாகியிருப்பதாக தெரிகிறது.

ஆனால் இதுவரை நாய்கள் ஆடுகளைத் தாக்கியதை யாரும் பார்க்கவுமில்லை. எந்த கேமராவிலும் பதிவாகவுமில்லை. ஆடுகளையும், கன்றுகளையும் கொடூரமாகத் தாக்கி ரத்தத்தைக் குடித்து, வயிற்றைக் கிழித்து ருசிக்கும் வேலையை நாய்கள் செய்யுமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை

6 ஆடுகள் சாவு

அந்தவகையில் படையாச்சிபுதூரைச் சேர்ந்த தங்கராஜ் என்ற விவசாயியின் தோட்டத்தில் கட்டியிருந்த 8 ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்துக் குதறப்பட்டுள்ளது. இதில் 6 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. சம்பவ இடத்தில் வருவாய்த்துறையினர், கால்நடைத்துறையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்த நிலையில் வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் வேட்டையாடும் மர்ம விலங்கு எது? அவை வேட்டை நாய்கள் தானா? என்ற கேள்விக்கு விடை காண வேண்டியது அவசியமாகும். மேலும் அவற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்தி கால்நடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.



Next Story