நாய் கடித்து தொழிலாளி படுகாயம்


நாய் கடித்து தொழிலாளி படுகாயம்
x

சுரண்டை அருகே நாய் கடித்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே உள்ள துவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி (வயது 60). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் காலையில் மாடசாமி தனது வீட்டில் இருந்து வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த நாய் ஒன்று அவரது காலை கடித்தது. இதில் பலத்த காயமடைந்த மாடசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story