வாகனம் மோதி மரநாய் சாவு


வாகனம் மோதி மரநாய் சாவு
x

கூடலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மரநாய் இறந்தது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் நகர பகுதியில் காட்டெருமை, மான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வழி தவறி வருவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் வணிக நிறுவன கட்டிடத்தில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்தது. பின்னர் வனத்துறையினர் அதை பிடித்து வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். அரிய வகை உயிரினமான மரநாய் அழிவின் பிடியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கூடலூர் கிளை நூலகம் பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்றனர். அப்போது சாலையோரம் மரநாய் ஒன்று தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது. சாலையை கடக்க முற்பட்ட சமயத்தில் வாகனம் மோதி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து சாலையோரம் மரநாய் உடல் கிடந்தது. வெகுநேரம் அப்பகுதியில் கிடந்த மரநாய் உடலை சிலர் அங்கிருந்து அப்புறப்படுத்தி புதருக்குள் வீசினர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, மரநாய் இறப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றனர்.


Next Story