மர்மபொருள் வெடித்து நாய் சாவு


மர்மபொருள் வெடித்து நாய் சாவு
x

வேலூர் அருகே மர்மபொருள் வெடித்து நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

வேலூர்

வேலூரை அடுத்த ஊசூர் ராஜாபாளையத்தை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 57). இவர் ஒரு நாய் வளர்த்து வந்தார். இந்தநிலையில் அந்த நாய் அங்குள்ள விவசாய நிலத்துக்கு சென்றபோது அங்குள்ள ஏதோ ஒரு மர்மபொருளை கவ்வி உள்ளது. அந்த பொருள் திடீரென வெடித்தது. அதில் வாய் சிதறி நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து அரியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெடித்த பொருள் நாட்டு வெடிகுண்டா என்பது குறித்தும் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story