நாய்கள் ஓட்டப்பந்தயம்


நாய்கள் ஓட்டப்பந்தயம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே நாய்கள் ஓட்டப்பந்தயம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார் மடம் அருகே உள்ள கடாட்சபுரம் சண்முகபுரத்தில் சீசர் ரேசிங் கிளப் சார்பில் 5-ம் ஆண்டு வளர்ப்பு நாய்களுக்கு ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து 67 வளர்ப்பு நாய்கள் பங்கேற்றன. போட்டியினை சண்முகபுரம் கனகலிங்கம், முதலூர் பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக செம்பொன்விளை வைத்தியர் முத்துவேல், நங்கைமொழி பஞ்சாயத்து தலைவர் விஜயராஜ், பல்லடம் செல்வசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொழிலதிபர் ஜேசுபாண்டியன் வரவேற்றார். போட்டியில் இரு நாய்களாக போட்டியில் பங்கேற்க வைக்கப்பட்டது. இதில் கடாட்சபுரம் அன்புராஜன் என்பவர் நாய் முதல் பரிசும், கடாட்சபுரம் அருள்ராஜ் என்பவரது நாய் 2-ம் பரிசும், வீரவநல்லூர் ஆனந்தராஜ் என்பவரது நாய் 3-ம் பரிசும், வள்ளியூர் திருமலாபுரம் வசந்த் என்பரது நாய் 4-ம் பரிசும் பெற்றது.

வெற்றி பெற்ற நாய்களுக்கு முதல் பரிசான ரூ.10 ஆயிரத்தை பல்லடம் செல்வசேகரன் வழங்கினார். 2-வது பரிசு பெற்ற நாய்க்கு அனைக்கரை கெபின் ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசு பெற்ற நாய்க்கு கரூர் பழனிச்சாமி ரூ.5ஆயிரமும், 4-வது பரிசு பெற்ற நாய்க்கு வள்ளியம்மாள்புரம் லட்சுமணசுபாஸ் ரூ.3 ஆயிரமும் வழங்கினர். தொடர்ந்து வந்த நாய்களுக்கு அண்ணாத்துரை, ஜெகன் அகிலராஜ், யஷ்வந்த், ரமேஷ் ஆகியோர் சிறப்பு பரிசு வழங்கினர்.


Next Story