பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன


பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன
x

சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் பப்ளிக் பார் அனிமல் அமைப்பை தொடர்பு கொண்டு சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க கேட்டுக்கொண்டார். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் நேற்று 2-ம் கட்டமாக சீர்காழி நகரில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 35-க்கும் மேற்பட்ட நாய்களை பாதுகாப்பாக பிடித்தனர். இதுகுறித்து பப்ளிக் பார் அனிமல் அமைப்பு சேர்ந்த நிர்வாகி கூறுகையில் பிடிபட்ட நாய்களை மயிலாடுதுறைக்கு வேனில் கொண்டு சென்று அங்கு அனைத்து நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பின்னர் மீண்டும் சீர்காழி நகர் பகுதியில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மற்றும் ஏற்கனவே பிடித்த சாலைகளில் மீண்டும் விடப்படும் என்றார்.


Next Story