வீட்டு வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வீட்டு வேலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில தலைவர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்க நிர்வாகி கிளாரா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வீட்டுவேலை தொழிலாளர்களை பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.80 சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வீட்டுவேலை தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story