தானமாக கொடுத்த கன்றுக்குட்டி மாயம்


தானமாக கொடுத்த கன்றுக்குட்டி  மாயம்
x

தானமாக கொடுத்த கன்றுக்குட்டி மாயம்

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த வசந்தி கார்டன் பகுதியை சேர்ந்த சுஜாதா என்பவர் கடந்த 6-ந்தேதி 9 மாத காளை கன்றுக்குட்டியை திருமுருகநாதசுவாமி கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார். பின்னர் பசு மடத்தை பராமரிப்பவரிடம் வாரந்தோறும் வந்து கன்றுக்குட்டிக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதாகவும் சுஜாதா கூறி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று சுஜாதா பசு மடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தானமாக வழங்கி கன்று இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுஜாதா பசுமட பராமரிப்பாளரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் உங்கள் கன்று பால் கறப்பதற்காக வெளியே சென்றுள்ளது என்று முதலில் கூறிவிட்டு, பின்னர் கன்று வெளியே ஓடிவிட்டது என்று மாறிமாறி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சுஜாதா இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலரிடம் புகார்மனு கொடுத்தார்.


Next Story